தேசிய செய்திகள்

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தெளிவற்ற வானிலையால் விமானங்கள் இயக்கப்படவில்லை

பனிப்பொழிவு மற்றும் தெளிவற்ற வானிலையால் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் இன்று இயக்கப்படவில்லை.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இன்று அங்கு மழை பொழிவும் உள்ளது. இந்த நிலையில், பனிப்பொழிவால் ஏற்பட்ட தெளிவற்ற வானிலையால் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பல விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் இங்கு எந்த விமானமும் இயக்கப்படவில்லை. இதுபற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பனிப்பொழிவால் ஏற்பட்ட தெளிவற்ற வானிலையானது விமான சேவையை பாதித்துள்ளது.

விமான நிலையத்தில் இன்று காலை முதல் எந்த விமானமும் வந்திறங்கவோ அல்லது கிளம்பி செல்லவோ முடியவில்லை. காலை 11 மணியளவில் ஆய்வு செய்து அதன்பின்பே விமான இயக்கம் பற்றி முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது