தேசிய செய்திகள்

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது -மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால்

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும், ஹிந்தியை கட்டாய பாடமாக்க, பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது. கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கையை மட்டுமே சமர்ப்பித்துள்ளது. இது கொள்கை முடிவு அல்ல.

வரைவு அறிக்கையின் மீது பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும். வரைவு அறிக்கை கொள்கை முடிவாக அமல்படுத்தப்படும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்