புதுடெல்லி
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
கொரோனா காரணமாக இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தது. 7-8 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, நான் மீண்டும் உங்கள் சேவைக்கு வந்துள்ளேன். இப்போது நன்றாக இருக்கிறது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.
நாங்கள் ஊரடங்கு கொண்டு வர விரும்பவில்லை. நீங்கள் முக கவசம் அணிந்தால் நாங்கள் கொண்டு வர மாட்டோம். மக்கள் முடிந்த அளவு விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
டெல்லியில் தினசரி பாதிப்பு தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 22 ஆயிரம் பேர் வரை பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.