தேசிய செய்திகள்

குஜராத்தைசேர்ந்தவர்கள் யாரும் வீர மரணம் அடைவதில்லை: அகிலேஷ் யாதவ் கருத்தால் சர்ச்சை

குஜராத்தைசேர்ந்தவர்கள் யாரும் வீர மரணம் அடைவதில்லை என்று அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

லக்னோ,

குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த எந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைவதில்லை என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் தென் இந்தியா பகுதிகளை சேர்ந்தவர்கள் நாட்டிற்காக வீர மரணம் அடையும் செய்திகள் அடிக்கடி வருகிறது. ஆனால், என்றைக்காவது குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்ததாக செய்தி வந்துள்ளதா? தேசியவாதம், வந்தே மாதரம், தியாகிகள் பெயரில் அவர்கள் அரசியல் செய்கின்றனர். அவர்கள் தேசியவாதமாக கருதுவது எதை? நம்மை இந்துக்களாக கூட அவர்கள் கருதுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அகிலேஷ் யாதவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, விரக்தியின் உச்சத்தில் அகிலேஷ் யாதவ் இவ்வாறு பேசியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்