தேசிய செய்திகள்

பதற்றத்தை தணிக்க எந்த நடவடிக்கையும் இல்லை: மத்திய பாதுகாப்பு படைகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு

மணிப்பூரில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் நீடித்து வருகிறது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இனக்கலவரம் பல மாதங்கள் நீடித்தது. இதனால் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மெல்ல அமைதி திரும்பிவந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் அமைதியற்ற சூழல் நிலவி வருவதோடு, பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர், மலைப்பகுதியில் இருந்து அதன் கீழ் உள்ள பகுதிக்குள் வசிப்பவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதற்கு தாழ்வான பகுதியில் உள்ள கிராம தன்னார்வலர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் கிராம தன்னார்வலர் மனோரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைதி குழு ஒன்றை அமைத்து, அம்மாநிலத்துக்கு  உள்துறை அமைச்சகம் அனுப்பியது. புலனாய்வு பிரிவின் (ஐபி) முன்னாள் சிறப்பு இயக்குநர் ஏ.கே.மிஸ்ரா தலைமையிலான 3 பேர் குழுவினர் நேற்று மணிப்பூர் வந்தடைந்தனர். இருப்பினும் மணிப்பூரில் தொடர்ந்து குக்கி பயங்கரவாதிகளால் கலவரம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் குக்கி பயங்கரவாதிகளால் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்தியப் படைகள் திணறி வருவதாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தாக்குதலை உடனடியாக தடுத்தது நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டத்திற்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...