தேசிய செய்திகள்

சித்தாந்தத்தை குடியரசுத் தலைவர் தேர்தலில் இழுக்க வேண்டாம் - வெங்கய்யா நாயுடு

நாட்டிற்கு தேவை “அரசியலமைப்புச் சட்டப்படியான குடியரசுத் தலைவர்” ஒருவரே என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறினார்.

ஹைதராபாத்

காங்கிரஸ்சும், இடதுசாரிகளும் தேவையற்ற விதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலை சர்ச்சைக்குரியதாக ஆக்குகின்றன. இப்போதைய தேர்தலை சித்தாந்த ரீதியிலான ஒன்று என அவை கூறி வருகின்றன. அப்படியெல்லாம் ஏதும் காணப்படாத நிலையில் இப்படியொரு சர்ச்சையை அவை கிளப்புகின்றன என்றார் வெங்கய்யா.

இப்படி சித்தாந்தத்தை உள்ளே இழுக்க வேண்டிய காரணம் எதையும் நான் காணவில்லை. அரசியல் கட்சிகள் எப்போதும் நடத்தும் குற்றச்சாட்டு அரசியலில் இருந்து குடியரசுத் தலைவர் தேர்தலை நகர்த்தி வைக்க வேண்டும் என்றார் வெங்கய்யா நாயுடு.

நாடு 42 ஆவது நெருக்கடி நிலை தினத்தை நினைவுபடுத்திக்கொள்ளும் போது அரசியலமைப்புச் சட்டப்படி நடந்து கொள்ளும் குடியரசுத்தலைவர் ஒருவரே தேவை என்றும் கூறினார் வெங்கய்யா.

அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் சித்தாந்தம் ஒன்றை வைத்திருப்ப்தே தேவை என்று கூறிய வெங்கய்யா அப்படிப்பட்ட நபர் குணநலன், திறமை மற்றும் நடத்தை ஆகியவற்றையும் கொண்டிருப்பது சிறப்பானது என்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்