தேசிய செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

போர்ட் பிளேர்,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. ஆனாலும், ஒருசில மாநிலங்கள்/ யூனியன்பிரதேசங்களில் வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில், யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் அங்கு யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை.

அந்தமான் தீவுகளில் இதுவரை 7,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,429 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர்.