தேசிய செய்திகள்

ரபேல் விசாரணையில் பிரதமர் மோடியை யாரும் காப்பாற்ற முடியாது - ராகுல்காந்தி

ரபேல் விசாரணையிலிருந்து பிரதமர் மோடியை யாரும் காப்பாற்ற முடியாது என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அவர் சிபிஐ இயக்குநராக தொடர வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள சிபிஐ தலைவர் முற்பட்டதால் இரவு ஒரு மணியளவில் அவர் நீக்கப்பட்டார். சிபிஐ தலைவர் அவருடைய அதிகாரத்திற்கு மீண்டும் வந்துள்ளது எங்களுக்கு சற்று நிவாரணமாகும். இனி என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அவர்கள் ரபேல் விவகார விசாரணையில் இருந்து தப்ப முடியாது. தப்புவது சாத்தியமற்றது. விசாரணையிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது. மக்கள் மன்றத்தில் பிரதமர் மோடி எங்களுடன் ரபேல் விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும். அவர்களை ரபேல் விவகாரத்தில் யாரும் காப்பாற்ற முடியாது. உண்மையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது, என கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்