அவர் பேசும்பொழுது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என நான் கூறுகிறேன். முந்தைய அரசாங்கங்களின் தவறுகளால் அது பாகிஸ்தான் பக்கம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்ப பெற நாம் முயற்சி செய்தோமென்றால் ஒருவரும் அதனை தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் அது நம்முடைய உரிமை என கூறினார்.
பாகிஸ்தானிடம் இருந்து அந்த பகுதியை திரும்ப பெற இந்தியா முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசும்பொழுது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தான் நாட்டுக்கு உரியது என கூறி சர்ச்சையை எழுப்பினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா எடுத்து கொள்ள அனுமதிக்கும் அளவிற்கு பாகிஸ்தான் பலவீனம் வாய்ந்த நாடு அல்ல என நேற்று அவர் தொண்டர்கள் முன் பேசினார்.
தொடர்ந்து அவர், அவர்கள் (பாகிஸ்தான்) குண்டு வீசினால், பொது மக்கள் மற்றும் வீரர்கள் இங்கு (காஷ்மீர்) பலியாகின்றனர். இங்கிருந்து குண்டு வீசினால் நம்முடைய மக்கள் மற்றும் வீரர்களும் அங்கு (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பலியாகின்றனர்.
எதுவரை இந்த புயல் தொடர்ந்து வீசும்? அப்பாவி மக்களின் ரத்தம் எதுவரை தொடர்ந்து சிந்தும்? என்றும் அவர் பேசினார்.