தேசிய செய்திகள்

பி.டி.டி. சால் சீரமைப்பு திட்டத்தில் ஒருவருக்கு கூட வீடு இல்லாமல் போய்விடக்கூடாது: உத்தவ் தாக்கரே

பி.டி.டி. சால் சீரமைப்பு திட்டத்தில் ஒருவருக்கு கூட வீடு இல்லாமல் போய்விடக்கூடாது என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

ஆலோசனை

மும்பையில் ஒர்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பி.டி.டி. சால்கள் அமைந்து உள்ளன். தற்போது பெரும்பாலான பி.டி.டி. சால் கட்டிடங்கள் அபாயநிலையில் உள்ளன. இந்த சால்களை சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். வர்ஷா பங்களாவில் நடந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல், வீட்டுவசதித்துறை மந்திரி ஜித்தேந்திர அவாத், சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே, தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தே, மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நங்ராலே மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உத்தரவு

அப்போது முதல்-மந்திரி, பி.டி.டி.சால் சீரமைப்பு திட்டத்தில் ஒருவருக்கு கூட வீடு இல்லாமல் போய்விடக்கூடாது, இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதேபோல பி.டி.டி.சால்களில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீசார், மரணமடைந்த போலீசாரின் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு