கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அமரிந்தர்சிங் தனது கருத்துகளை மறுபரிசீலனை செய்வார்: காங்கிரஸ் நம்பிக்கை

ராகுல், பிரியங்கா பற்றிய தனது கருத்துகளை அமரீந்தர் சிங், மறுபரிசீலனை செய்வார் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய அமரிந்தர்சிங், நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் அனுபவமற்றவர்கள். அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், அமரிந்தர்சிங் எங்களை விட மூத்தவர். வயதானவர்கள் அடிக்கடி கோபத்தில் எவ்வளவோ பேசுவார்கள். அவரது கோபம், வயது, அனுபவம் ஆகியவற்றை மதிக்கிறோம். அந்த வார்த்தைகள், அவரது அந்தஸ்துக்கு அழகல்ல. அவர் தனது வார்த்தைகளை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம். அரசியலில் கோபம், பொறாமை, விரோதம், பழிவாங்குதல், தனிப்பட்ட தாக்குதல் ஆகியவற்றுக்கு இடமில்லை. அவர் இன்னும் காங்கிரஸ் தலைவர்தான். அவர் கட்சியை விட்டு விலகுவதாக இருந்தால், அதுபற்றி நான் சொல்ல எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை