புதுடெல்லி,
மக்களவையில் மத்திய அரசு அளித்து உள்ள பதிலில், தென் இந்தியாவில் இரண்டாவது தலைநகரை அமைக்கும் திட்டம் கிடையாது என கூறிஉள்ளது. தென் இந்தியாவில் (ஐதராபாத்) இரண்டாவது தலைநகரை அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் அளித்து உள்ள பதிலில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் கடந்த வாரம் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசுகையில், டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருவதால் தலைநகரில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை தென் இந்தியாவிற்கு மாற்ற, பரிசீலனை செய்யும்படி கோரிக்கையை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.