திருவனந்தபுரம்,
பாதிரியார் டாம் உழுன்நளில் விடுவிக்க கடத்தல்காரர்களுக்கு எந்த வகையிலும்
பிணைத்தொகை வழங்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் தாமஸ் உலுன்நளில். இவர், ஒமன் நாட்டில் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த இல்லத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை சுட்டுக் கொன்றனர். பின்னர் அந்த இல்லத்தில் இருந்த பாதிரியார் தாமஸ் உலுன்நளிலை கடத்திச் சென்றனர். அதன் பிறகு அவர், என்னவானார்? என்பது தெரியாமல் இருந்தது.
சில மாதங்களுக்கு பிறகு தாமஸ் உழுநாளில் பயங்கரவாதிகள் பிடியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கத்தோலிக்க அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். 18 மாதங்கள் ஆன நிலையில் பாதிரியார் தாமஸ் உலுன்நளில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி விகே சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, விகே சிங் கூறியதாவது:- பாதிரியார் உழுன்நலில் மீட்கப்பட்டதன் மூலம், வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தீவிரமாக எந்த சலசலப்பும் இன்றி பணியாற்றியதை சுட்டிக்காட்டுகிறது. பாதிரியாரை மீட்க பணம் கொடுக்கப்பட்டதா?என்று கேட்கிறீர்கள்.
அது போன்று எந்த வகையிலும் பிணைத்தொகை வழங்கப்படவில்லை. பாதிரியார் ஏமனில் மாயமான பொழுதில் இருந்து இந்த வகையில் விமர்சனம் எழுந்ததை நாங்கள் அறிவோம். பாதிரியார் பத்திரமாக திரும்பி வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுவார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.