தேசிய செய்திகள்

தடுப்பூசி கிடைக்கும் விவகாரத்தில் சாடல்: ராகுலுக்கு சுகாதார மந்திரி பதிலடி

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான வலிமையான ஆயுதமாக தடுப்பூசி திகழ்ந்து வருகிறது. ஆனால் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், மந்தகதியில் தடுப்பூசி போடப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து சாடி வருகிறார்.

தினத்தந்தி

இதற்காக தடுப்பூசிகள் எங்கே? என்ற ஹேஷ்டாக்கில் அவர் பதிவுகள் வெளியிடுவதை வாடிக்கையாக்கி உள்ளார். நேற்று அவர் வெளியிட்ட பதிவில், ஜூலை மாதம் போய் விட்டது. தடுப்பூசி தட்டுப்பாடுதான் இன்னும் போகவில்லை என சாடி இருக்கிறார். இதற்கு மத்திய அரசின் சார்பில் சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

ஜூலை மாதத்தில் இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த மாதம் அது மேலும் விரைவுபடுத்தப்படுகிறது. இந்த சாதனைக்காக நமது சுகாதாரப்பணியாளர்களை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். இப்போது நீங்களும் (ராகுல்காந்தி) அவர்களுக்காகவும், நாட்டுக்காகவும் பெருமைப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து