தேசிய செய்திகள்

ஏர் இந்தியா ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிய தடை

தனது நிறுவன பணியாளர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிய தடை விதிக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பணிப்பகுதிகளில் சுகாதாரமற்ற உடைகளை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் அலுவலகங்களில் டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் போன்ற உடைகளை உடுத்தக் கூடாது என தெரிவித்துள்ள ஏர் இந்தியா கிழிந்த மற்றும் கண்ணியக்குறைவான உடைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

துணிகள் நன்கு சலவை செய்யப்பட்டதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியா வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் எனவும் விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து