தேசிய செய்திகள்

2022 குடியரசு தின சிறப்பு விருந்தினர் குறித்த தகவல் உண்மை இல்லை - மத்திய அரசு

2022 குடியரசு தினத்துக்கான சிறப்பு விருந்தினர் குறித்து வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு (2022) நடைபெறும் விழாவில், வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 2022 குடியரசு தினத்துக்கான சிறப்பு விருந்தினர் குறித்த ஊடகங்களின் யூக அறிக்கையைப் பார்த்தோம். அந்த அறிக்கை தவறானது மற்றும் அதில் எந்த உண்மை ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது