தேசிய செய்திகள்

ஜெய் ஸ்ரீராம் என கொல்கத்தாவில் கூறி நான் கேட்டதில்லை; அமர்த்தியா சென்

ஜெய் ஸ்ரீராம் என கொல்கத்தாவில் கூறி நான் கேட்டதில்லை என்று பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.

தினத்தந்தி

இந்திய பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவயியலாளரான அமர்த்தியா சென் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். பொருளாதார அறிவியலில் நோபல் பரிசு பெற்றவரான அவர் கூறும்பொழுது, இதற்கு முன் இங்கு ஜெய் ஸ்ரீராம் என கூறி நான் கேட்டதில்லை. இது மக்களை அடித்து, தாக்குவதற்கு சமீப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வங்காள கலாசாரத்துடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என நான் நினைக்கிறேன். சமீப நாட்களில் இங்கு ராம நவமி அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையும் நான் இதற்கு முன் கேட்டறியவில்லை.

எனது 4 வயது பேத்தியிடம், உனக்கு பிடித்த கடவுள் எது? என்று கேட்டேன். அதற்கு அவள் அன்னை துர்க்கை என கூறினாள். அன்னை துர்க்கையின் முக்கியத்துவம் ஆனது ராம நவமியுடன் ஒப்பிட முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது