தேசிய செய்திகள்

டெல்லியில் வடகிழக்கு கலாச்சார மையம் அமையவுள்ளது - அமைச்சர் ஜிதேந்திரா சிங்

மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் டெல்லியில் வடகிழக்கு கலாச்சார, தகவல் மையம் அமையவுள்ளது என்று கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி

வடகிழக்கு மாநிலங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை தொடர்ந்து இந்த அமையவுள்ளதாகவும், இது அந்த மக்களுக்கான பரிசாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

துவாரகா எனுமிடத்தில் டெல்லி வளர்ச்சி முகமை 1.32 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலத்தில் வடகிழக்கு கவுன்சில் ரூ 50-55 கோடி செலவில் மையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறுவும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த மையம் கலாச்சாரம் மற்றும் மாநாட்டு கூடமாகவும், தகவல் மையமாகவும் அமையும் என்றும் அவர் தெரிவித்தார். இம்மையம் சர்வதேச தரத்தில் அமையுள்ளதாகவும், இம்மாநிலங்களின் விவரங்கள் அடங்கிய நூலகத்துடன் கூடிய வாசக அறையும், அத்துடன் அருங்காட்சியகத்தையும் இது கொண்டிருக்கும் என்றும் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சர் கூறினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஏராளமான வடகிழக்கு மாணவர்கள் படித்து வருவதால் அம்மாணவர்களுக்கான பராக் விடுதியைக் கட்டுவதற்கு ஜூலையில் இங்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் அவர் கூறினார். சென்றாண்டு பெங்களூருவில் வட கிழக்கு மாணவிகளுக்கு என்று தனியான விடுதி கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது என்றும், டில்லி ஹாத் பகுதியில் வட கிழக்கு பொருட்களை விற்பதற்கென்று நான்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன அவர் தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்