தேசிய செய்திகள்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்றிலிருந்து தடை - நார்வே வரவேற்பு

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

புதுடெல்லி,

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. 100 மைக்ரோனுக்கு குறைவான பிவிசி அல்லது பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை ஜூலை 1ம்தேதி முதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனையை மற்றும் பயன்பாட்டை தடுக்க மாநில எல்லைகளில் சோதனைசாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசின் இந்த அறிவிப்பை நார்வே பாராட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய நார்வே தூதர்(பொறுப்பு) மார்ட்டின் ஆம்டால் போத்தேம் கூறுகையில்,

"ஒருமுறை மட்டுமே பயன்படுத்த தக்க பிளாஸ்டிக்கை தடை செய்த இந்திய அரசின் நடவடிக்கையை நார்வே வரவேற்கிறது. இந்த 'முக்கியமான நடவடிக்கையை' எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.

எங்கள் தூதரக வளாகத்தில் இந்த பிளாஸ்டிக் தடை நடவடிக்கையை மிகத் தீவிரமாக கடைபிடிப்போம். நார்வேயில் கடந்த ஆண்டே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.நேற்று இந்தியாவில் உள்ள நகராட்சிகளுடன் பிளாஸ்டிக் குப்பைகளை எப்படி கையாள்வது என்பதை பகிர்ந்து கொண்டோம்" என்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்