தேசிய செய்திகள்

குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான நடவடிக்கையை சட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை சுப்பிரமணிய சாமி

2ஜி வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான முறையான நடவடிக்கையை சட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என சுப்பிரமணிய சாமி கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

2 ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னடைவு கிடையாது, ஒரு பாதை விலகல் மட்டுமே என குறிப்பிட்டு உள்ளார் சுப்பிரமணிய சாமி.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்தது. வழக்கில் நியாயமான சந்தேகங்களை நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது, எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என நீதிமன்றம் கூறியது.

இதற்கிடையே வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தெரிவித்தது.

தீர்ப்பு தொடர்பாக பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, 2ஜி வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான முறையான நடவடிக்கையை சட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டிஉள்ளார்.

தீர்ப்பு வெளியான பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, 2ஜி வழக்கில் நீதிபதி ஷைனி தவறான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் அப்படி கூறவில்லை. நான் கூறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும். வழக்கு ர்தீர்ப்பு நிச்சயம் பின்னடைவு கிடையாது, ஒரு பாதை விலகல் மட்டுமே. இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வக்கீல்கள் தீவிரமாக வாதாடவில்லை. குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான முறையான நடவடிக்கையை சட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. அதனால் தீர்ப்பு எதிராக அமைந்துள்ளது. எனவே பிரதமர் மோடி போர்க்கால அடிப்படையில் ஊழலுக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் உள்ளது. தீர்ப்பு மோசமான தீர்ப்பு, மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. இது ஒன்றும் இறுதி தீர்ப்பு கிடையாது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்துவேன் என்றார்.

மேலும் பேசுகையில், ஆ. ராசாவை விசாரணை அதிகாரிகள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதினேன், ஆனால் பல மாதங்களுக்கு அவர் எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போதும் கூட பல அதிகாரிகள் ப.சிதம்பரத்துக்கு விசுவாசமாக உள்ளனர். முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கியை அட்டர்னி ஜெனரலாக நியமிக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினேன். குற்றம்சாட்டப்பட்ட சில நிறுவனங்களுக்காக இவர் வழக்கறிஞராக வாதாடி உள்ளார், அதனால்தான் அட்டர்னி ஜெனரலாக இவரை நியமிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். அவர் தீர்ப்பை வரவேற்று உள்ளார் என குறிப்பிட்டு உள்ளார் சுப்பிரமணிய சாமி.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஐகோர்ட்டு விடுவித்த போது நிகழ்ந்தது போல காங்கிரசாரும், அதன் கூட்டணி கட்சிகளும் தற்போது கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்தும் மாறி விட்டது. அதைப்போல இந்த தீர்ப்பிலும் மாற்றம் வரும் என குறிப்பிட்டு உள்ளார் சுப்பிரமணிய சாமி.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு