ஹைதராபாத்
குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் 10,98,903 வாக்குகள் உள்ளன. இதில் 3.5 அல்லது நான்கு லட்சம் வாக்குகளை நாங்கள் ஏற்கனவே வைத்துள்ளோம். இத்தேர்தலில் கொறடாவின் உத்தரவு இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் எப்படி செயல்படுகின்றன என்று காண வேண்டும் என்றார் சுதாகர் ரெட்டி.
சில தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் எங்களை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். மீரா குமாருக்கு ஆதரவு திரட்ட சில கட்சிகளை தாங்கள் அணுகப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிகார் முதல்வரின் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவுதான் என்றார் அவர். பிகார் முதல்வர் நிதிஷ்சின் கோவிந்த் ஆதரவின் பின்னால் என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது கோவிந்த்திற்கு 62 சதவீத வாக்குகள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. அவருக்கு பாஜக மட்டுமின்றி தேஜகூவின் உறுப்பினர் அல்லாத தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், அஇஅதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆதரவளித்துள்ளன.