தேசிய செய்திகள்

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா காலமானார்

சாகித்ய அகாடமி விருது மூத்த மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா தனது 77வது வயதில் இன்று காலமானார்.

மலையாளத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான புனத்தில் குஞ்ஞப்துல்லா 1940ஆம் ஆண்டு கேரளாவின் வடகரையில் பிறந்தார். 1980ஆம் ஆண்டு இவர் எழுதிய 'ஸ்மார சிலகள்' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது. கேரள சாகித்ய அகாடமி விருதும் இந்த நாவலுக்குக் கிடைத்துள்ளது.

இந்த நாவல் தமிழில் குளச்சல் மு.யூசுப் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. இவரது மஷ்ஹர் பெருவெளி, மருந்து ஆகிய நாவல்களும் தமிழில் வெளியாகி பரவலான வாசகர்களைப் பெற்றுள்ளது.

குஞ்ஞப்துல்லா எழு நாவலகளையும் 15 சிறுகதை தொகுப்புகளையும் எழுதி உள்ளார்.

மரன்னு,பரலோகம், புனத்திலேண்டே நோவல்கள், கன்யாவானன்கள், அக்னிகினாவுகள், மற்றும் அம்மயே கானான் ஆகிய நாவல்களை எழுதி உள்ளார்.

சாகித்ய அகாடமி விருது, கேரள சாகித்ய அகாடமி விருது, முட்டத்து வர்க்கி விருது, விஷ்வதீபம் விருது உள்ளிட்ட மதிப்புமிக்க பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

புனத்தில் குஞ்ஞப்துல்லா தனது 77வது வயதில் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்