தேசிய செய்திகள்

“நலிவுற்றோருக்காக எதையும் செய்யவில்லை” - காங்கிரஸ் மீது பா.ஜ.க. பாய்ச்சல்

நலிவுற்றோருக்காக எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில், மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்து மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பூபேந்தர் யாதவ், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், சமூக, பொருளாதார நீதி அடிப்படையில் சமத்துவ சமுதாயம் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இது. இதற்காக பிரதமர் மோடியை பா.ஜ.க. பாராட்டுகிறது என தெரிவித்தார்.

அதே நேரத்தில் அவர் காங்கிரஸ் கட்சியை சாடினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் எதுவுமே செய்யவில்லை என குறிப்பிட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்