தேசிய செய்திகள்

என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி

புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜோசப் கடந்த ஆண்டு கெலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்ரவாளி சந்திரசேகர், வயது 54. கொலை வழக்கில் கைதாகியிருந்த சந்திரசேகர், தற்போது ஜாமீனில் வெளியில் இருந்தார். இச்சூழலில் இன்று காலாப்பட்டு-மாத்தூர் சாலையில் சென்று கெண்டிருந்த சந்திரசேகர் மீது மர்ம நபர்கள், வெடிகுண்டு வீசியும் அதைத் தெடர்ந்து வெட்டியும் படுகொலை செய்தனர்.