தேசிய செய்திகள்

என்ஆர்சி சட்டத்தால் கூர்க்கா மக்களுக்கு பாதிப்பில்லை: திரிணமூல் காங்கிரஸ் பொய் சொல்கிறது - அமித் ஷா

என்ஆர்சி சட்டத்தால் கூர்க்கா மக்களுக்கு பாதிப்பில்லை என்றும், திரிணமூல் காங்கிரஸ் பொய் சொல்வதாகவும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கலிம்போங்,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 கட்டதேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. எஞ்சிய 4 கட்டத் தேர்தல் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதன்படி 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளநிலையில், அம்மாநிலத்தின் கலிம்போங் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) கொண்டுவரப்பட்டால் கூர்க்கா சமூகம் வெளியேற்றப்படுவார்கள் என்று தவறான தகவல் மேற்கு வங்காள மாநிலத்தில் பரப்பப்பட்டு வருகிறது. என்ஆர்சி இன்னும் இங்கு கொண்டு வரப்படவில்லை. ஆனால். என்ஆர்சி கொண்டுவரப்பட்டாலும் கூர்க்கா சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட வெளியேற்றப் படமாட்டார்கள். திரிணமூல் காங்கிரஸ் பொய் சொல்கிறது. இந்தச் சட்டத்தால் ஒரு கூர்க்கா கூட பாதிக்கப்படமாட்டார் என நான் உறுதி அளிக்கிறேன். கலிம்போங்க் பகுதி பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது.

1986-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உங்களை அடக்கியது. 1200-க்கும் அதிகமான கூர்க்கா மக்கள் உயிரிழந்தனர். உங்களுக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. மரியாதைக்குரிய தீதி (மம்தா பானர்ஜி) ஆட்சிக்கு வந்தபோதும் அவரும் சில கூர்க்கா மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தார். அதற்கும் நீதி கிடைக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் பாஜக அரசை நீங்கள் இப்போது தேர்ந்தெடுங்கள். நாங்கள் வந்த உடன் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து நீதி கிடைக்க செய்து தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்புவோம். மத்திய மந்திரி அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறது. மேற்குவங்க மக்கள் என்னை எப்போது பதவியை ராஜினாமா செய்ய சொல்கிறார்களோ அப்போது எனது பதவியை நான் ராஜினாமா செய்வேன். ஆனால், மே 2-ம் தேதி மேற்குவங்க முதல்-மந்திர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது