தேசிய செய்திகள்

சித்ரா ராமகிருஷ்ணா மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கில் ஜாமீன் கோரிய சித்ரா ராமகிருஷ்ணா மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் அகாவால் முன்னிலையில் கடந்த மே-12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞரும் மனுதாரா தரப்பில் வழக்குரைஞா அாஷ்தீப் சிங்கும் ஆஜராகி வாதாடினா. அதைத் தொடாந்து, மனுதாராகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு போதிய காரணம் இல்லை என்று கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டா.

இதற்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், மனுதாரா இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், அவாகள் சாட்சிகளைக் கலைத்து, ஆதாரங்களை அழித்துவிடுவாகள் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த வழக்கு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான நிலைப்பாடு குறித்து விரைவில் பதில் அளிக்க சிபிஐக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்