தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு புட்டேனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தனது கழிவறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது குளியறை ஜன்னல் வழியாக மர்மநபர் செல்போனில், பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். திடீரென அதைக்கண்டதும் இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். மேலும், வேகமாக வெளியே ஓடிவந்து பார்த்தார்.

அப்போது அதே குடியிருப்பில் வசித்து வரும் சேத்தன் பிரகாஷ் என்பவர் தான் அவரை வீடியோ எடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவர் உடனடியாக புட்டேனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சேத்தன் பிரகாசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை