தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: போலீஸ் காவல் முடிந்து பேராயர் பிராங்கோ சிறையில் அடைப்பு

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் போலீஸ் காவல் முடிந்து பேராயர் பிராங்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.

கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலாங்காட்டை சேர்ந்த மறைமாவட்ட பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது ஒரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் கூறினார். போலீசார் பேராயர் பிராங்கோவிடம் விசாரணை நடத்தி கடந்த 21-ந் தேதி இரவு கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

2 நாள் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று அவரை போலீசார் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை அக்டோபர் 6-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அவரை போலீசார் பாலாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிந்ததும் பேராயர் பிராங்கோவை போலீசார் பாலா கிளை சிறையில் அடைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்