தேசிய செய்திகள்

ஒடிசா மாநிலம் ரூர்கேலா உருக்காலையில் நச்சு வாயு கசிந்து 4 பேர் பலி

ஒடிசா மாநிலம் ரூர்கேலா உருக்காலையில் நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மயக்கமடைந்தனர்.

தினத்தந்தி

புவனேஸ்வர்

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இந்திய உருக்கு ஆணையத்துக்குச் சொந்தமான ஆலையில், நிலக்கரி எரிக்கும் உலைப்பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு குழாயை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உலையில் இருந்து கசிந்த நச்சுவாயுவை சுவாசித்த 10 பேர் மயக்கமடைந்தனர். அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தனர்.

தொழிலாளர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை