ஒடிசா,
ஒடிசாவின் கட்டாக் மாவட்டம் அருகே உள்ள நெர்கண்டி ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உரம் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயில் தடம் புரண்டதில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டன. கங்காவரம் துறைமுகத்தில் இருந்து ஹபர்கான் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் தடம் புரண்ட விபத்து அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக நராஜ் மற்றும் கபிலாஸ் வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹதியா- புரி தபஸ்வினி எக்ஸ்பிரஸ், செகந்திரபாத் -ஹவ்ரா சிறப்பு ரயில் போன்ற பயணிகள் ரயிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேதம் அடைந்த தண்டவாளத்தை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.