ஜம்மு,
ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்ற தேர்தலுக்கு நடத்துவதற்கு முன்பாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளது. ஜம்முவில் தனது கட்சியினர் மத்தியில் பேசிய உமர் அப்துல்லா கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
இந்த உறுதி மொழி பிரதமர் மோடியாலும், உள்துறை அமைச்சராலும் வழங்கப்பட்டது. ஆகவே, இதை நிறைவேற்ற வேண்டும்.
நாங்கள் எங்கள் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை. முக்கிய கோரிக்கைகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.