திருவனந்தபுரம்,
இந்தியாவில் அதிகளவு கொரோனா தினசரி பாதிப்பு வரிசையில் கேரளாவும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் பற்றி மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,944 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 463 பேர் இன்று குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 31,098 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவில் ஒரு நாள் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக இன்று உள்ளது. இதனால், மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 328 ஆக உயர்ந்து உள்ளது.