பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை 226 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் நேற்றைய 6ந்தேதி நிலவரப்படி மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒமைக்ரானால் பாதித்தோரின் எண்ணிக்கை 333 ஆக அதிகரித்துள்ளது. இதனை கர்நாடக சுகாதார மந்திரி கே. சுதாகர் தனது டுவிட்டரில் உறுதி செய்து உள்ளார்.