தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பாதிப்பு; பெங்களூரு விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை

ஒமைக்ரான் பாதிப்புகளை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையத்தில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை முன்னிட்டு பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இதுபற்றி விமான நிலைய முனைய செயல் தலைவர் கூறும்போது, கர்நாடக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆபத்து ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ளும்படி அனைத்து விமான நிறுவனங்களையும் கேட்டு கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்