தேசிய செய்திகள்

தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன் ரெயில் மோதி பலி

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் புரி மாவட்டம் மங்கலகட் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் விஷ்வஜித் ஷா. இந்த சிறுவன் நேற்று தனது குடும்பத்துடன் ஜானக்தேவ்பூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளான்.

இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் கோவிலில் இருந்த நிலையில் சிறுவன் விஷ்வஜித் ஷா மட்டும் கோவிலுக்கு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளான். பின்னர், தண்டவாளத்தில் நின்றவாறு தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளான்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் ரெயில் வந்துள்ளது. ரெயில் வந்ததை கவனித்த விஷ்வஜித் அதன் அருகே நின்றவாறு ரீல்ஸ் எடுக்க நினைத்துள்ளார். அதன்படி, ரெயில் முன் நின்று வீடியோ எடுத்துள்ளார். அப்போது, வேகமாக வந்த ரெயில் விஷ்வஜித் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் விஷ்வஜித் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மீது ரெயில் மோதிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்