லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலம், பெரோசாபாத்திலுள்ள ரெயில்நிலையம் வழியாக சென்ற சிறப்பு ரெயிலில் ஏராளமானேர் பயணித்தனர். அதிலிருந்தேருக்கு ரயில்வே அதிகாரி ஒருவர், சிறிது தூரத்தில் இருந்து பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசினார். ரெயிலில் இருந்தவர்கள் கூடுதலாக பிஸ்கெட்டுகள் கேட்டபேது, அவமதிக்கும் வகையிலும் அவர் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
அங்கிருந்த ஒருவர் தனது செல்பேனில் எடுத்த வீடியே, ரெயில்வே அதிகாரியின் வாட்ஸ் அப் குழு மூலம் பிற சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரி பணியிடை நீக்கம் என சம்மந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கையை ரெயில்வே எடுத்துள்ளது.