தேசிய செய்திகள்

மோடி மீதான புகாரில் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கவில்லை தலைமை தேர்தல் கமி‌ஷனர் பதில்

மோடி மீதான புகாரில் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கவில்லை என தலைமை தேர்தல் கமி‌ஷனர் பதில் அளித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா மீது கூறப்பட்ட நடத்தை விதிமீறல் புகாரில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கவில்லை. தகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது. இதனை கமிஷனர் அசோக் லாவசா அனுமதிக்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார். நான் யாருக்கும் நன்னெறி நீதிபதி அல்ல. லாவசாவைவிட சற்று மூத்தவன். அவருடைய உணர்வுகள் எப்படி இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் பொய் சொன்னதில்லை.

தேர்தல் கமிஷனில் அனைவரும் ஜெராக்ஸ் காப்பிகள் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது. பேசுவதற்கும் ஒரு நேரம், அமைதியாக இருப்பதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம் என்றால் ஒன்று அது ஒருமித்த கருத்தாக இருக்கும் அல்லது பெரும்பான்மையினர் கருத்தாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து