தேசிய செய்திகள்

சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? -சுப்ரீம் கோர்ட்டு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ளது, இப்பணிகளுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

எத்தனை பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்? எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 31-க்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. வழக்கு தொடர்பாக நாளை மத்திய அரசு மனுத்தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு