தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடன் சண்டை; கமாண்டோ படை வீரர் பலி

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான சண்டையில் கமாண்டோ படை வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் கிஸ்தாராம் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலறிந்து கமாண்டோ படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்களை கண்டதும் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதற்கு பதிலடியாக கமாண்டோ படை வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் 2 வீரர்கள் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை