தேசிய செய்திகள்

ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்திற்கு மிகக் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் மாநிலம் முழுவதும் தேவையான தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவும் தமிழ்நாட்டிற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகளை கிடைத்திடவும் தமிழகத்திற்கு ஒருகோடி தடுப்பூசியை சிறப்பு ஒதுக்கீடாக வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்