திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் சில மணி நேரமும், இலவச தரிசனத்தில் பலமணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 24 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 826 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.3 கோடியே 85 லட்சம் ஆகும்.