தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மராட்டியத்தில் ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் பல ரெயில்நிலையங்களில் நடைமேம்பாலங்கள் நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் சந்திராப்பூரில் உள்ள பல்ஹர்ஷா ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில், புனே செல்லும் ரெயில் வந்து நின்றது. இந்த ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் அங்கிருந்த ரெயில்வே நடைமேம்பாலம் வழியாக அதிக அளவில் நடந்து சென்றனர்.

இந்தநிலையில் ரெயில்வே நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் நடந்து சென்ற சிலர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பெண் ஒருவர் பலியானார்.

இந்த விபத்து குறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைமேம்பாலத்தின் பிளாட்பாரத்தில் 2 சிலாப் உடைந்து விழுந்துள்ளது. ஆனால் அந்த பலத்தின் மற்ற பகுதி பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது, என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு