ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். காக்போரா ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் ரயில் நிலையத்திற்கு வெளியே தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தற்போது அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.