தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால் லட்சக்கணக்கான மிலிந்த் தியோராக்கள் வருவார்கள் - ஜெய்ராம் ரமேஷ்

மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். இந்தநிலையில், மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த முரளி  தியோரா. அவரது மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைந்தார்.

இந்தநிலையில், மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அக்கட்சியின் தகவல் தெடர்பு பெதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஒரு மிலிந்த் தியேரா வெளியேறுவார். ஆனால் லட்சக்கணக்கான மலிந்த் தியேராக்கள் எங்களுடன் வந்து சேருவார்கள். காங்கிரசை இது எந்த வகையிலும் பாதிக்காது. இந்த முடிவு பிரதமர் மேடியால் எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு