தேசிய செய்திகள்

மத்திய உள்துறை செயலாளருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு

மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவிற்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய உள்துறை செயலாளராக இருப்பவர் அஜய்குமார் பல்லா. அடுத்தவாரம் இவர் ஓய்வுபெற உள்ள நிலையில் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய உள்துறை செயலாளராக இருக்கும் அஜய்குமார் பல்லா வருகிற 22-ந்தேதி ஓய்வு பெற இருந்தார். இந்தநிலையில் அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அசாம்-மேகாலயா பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஜய்குமார் பல்லா, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு (2020) முடிவடைந்த நிலையில், அப்போதும் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்