புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ச்செப்டம்பர் 25-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.