தேசிய செய்திகள்

வெங்காயம் கிலோ ரூ.22 -அலைமோதும் கூட்டம்

ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் என்ற விலையில் டெல்லியில் விற்கப்படுகிறது. டெல்லி முழுவதும் மக்கள் வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி

வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் அங்கு இருந்து வெங்காய வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக டெல்லியில் மத்திய அரசின் நடமாடும் நியாய விலைக்கடை மூலமாக குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் என்ற விலையில் டெல்லியில் விற்கப்படுகிறது. டெல்லி முழுவதும் மக்கள் வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்த 56 ஆயிரம் டன் வெங்காயத்தில் 16 ஆயிரம் டன் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்