தேசிய செய்திகள்

வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 15-20 நாட்களில் குறையும் விவசாயத்துறை செயலாளர்

வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 15-20 நாட்களில் குறையும் என விவசாயத்துறை செயலாளர் எஸ் கே பட்நாயக் கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

வெங்காயம் மற்றும் தக்காளியின் வரத்து காரணமாக சில்லறை விற்பனையில் 15-20 நாட்களில் குறையும் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நாடு முழுவதும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை உயர்வு என்பது தற்காலிக பிரச்சனையாகும், சூழ்நிலையானது நிச்சயமாக மாறும் என கூறிஉள்ளார். பட்நாயக். புதுடெல்லியில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையானது ரூ. 70-80 ஆக இருக்கிறது. இதேபோன்று பிற தலைநகரங்களிலும் வெங்காயம், தக்காளியின் விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் வெங்காயம் விலை உயர்ந்து காணப்பட்டாலும், தக்காளியின் விலை குறைந்து வருகிறது.

விரைவில் விலையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையானது உள்ளது. மராட்டியத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக இருக்கும், அங்கிருந்து வரத்து தொடங்கியதும் விலையானது குறைய தொடங்கும், அடுத்த 15-20 நாட்களில் வெங்காயத்தின் விலையானது குறையும், என கூறிஉள்ளார் பட்நாயக்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...