தேசிய செய்திகள்

14 ஆயிரம் பேர் எழுதிய அரியானா நீதிபதி தேர்வில் 9 பேர் மட்டுமே வெற்றி - விடைத்தாள்களை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

14 ஆயிரம் பேர் எழுதிய அரியானா நீதிபதி தேர்வில் 9 பேர் மட்டுமே வெற்றிபெற்றதால், விடைத்தாள்களை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி


புதுடெல்லி,

அரியானாவில் 107 சிவில் நிதிபதி (இளநிலை பிரிவு) பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதன் முதல்நிலை தேர்வை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதி அதில் 1,282 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் பிரதான தேர்வை 1,195 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.

இதில் வெறும் 9 பேர் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இது தேர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேர்வர்களில் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து தங்கள் உத்தரவு வராமல் யாரையும் சிவில் நீதிபதியாக நியமிக்கக்கூடாது என அரியானா-பஞ்சாப் ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் அரியானா சிவில் நீதிபதி பணியிடத்துக்கு பிரதான தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரியை சுப்ரீம் கோர்ட்டு தற்போது நியமித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து