தேசிய செய்திகள்

ஓணத்தையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் 9-ந் தேதி நடை திறப்பு

ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் 9-ந் தேதி நடை திறக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

சபரிமலை,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 9-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், தந்திரி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்துவைக்கிறார். திருவோண தினமான 11-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று மதியம் அய்யப்ப பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது.தொடர்ந்து 13-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அன்று இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16-ந் தேதி மாலையில் நடை திறக்கப்படும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்